Login

Lost your password?
Don't have an account? Sign Up

12-09-2021 முழு நிகழ்வு: தமிழரா.. திராவிடரா..? இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் | சீமான் | மணியரசன்

Click Here to Add Your Business

கருத்தரங்க நிகழ்வினை, செம்மை மரபுப் பள்ளியின் நிறுவனர் ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்து, ‘சங்க காலத் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் இறைப் பேருரை நிகழ்த்தினார். முன்னதாக  காலை அமர்வில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில் அவர்கள் கருத்தரங்கின் நோக்கம் குறித்து உரையாற்றி, நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து, 'தமிழ்த்தேசியமும், தமிழர் நலனும்!' என்ற தலைப்பில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களும், 'தமிழரே இம்மண்ணின் பூர்வக்குடிகள்!' என்ற தலைப்பில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அ.வினோத் அவர்களும், 'தமிழர் என்ற தேசிய இனம்!' என்ற தலைப்பில் சமூகச் செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி அவர்களும் கருத்துரையாற்றினர்.

மாலை அமர்வில், 'இந்தியமும் தமிழ்த்தேசியமும்!' என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பேரறிஞர் கி.வெங்கட்ராமன் அவர்களும்,‌ 'தொல்தமிழர் வரலாறும், திராவிடமும்!' என்ற தலைப்பில் தமிழ்ப்பெரும் ஆய்வர் தக்கார் மா.சோ.விக்டர் அவர்களும், ‌'திராவிடத்தின் வரலாற்றுத் திரிபுகள்!' என்ற தலைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் பெ.மணியரசன் அவர்களும்,  தமிழ்த்தேசியக் கருத்துகள் செறிந்த, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேருரைகளை நிகழ்த்தினர்.

இறுதியாக, திராவிடக் குழப்பவாதமும், தமிழ்த்தேசியத் தீர்வும்! என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

புகைப்படங்கள்:

Contact us to Add Your Business

30 comments

  1. Thillai Natarajar

    ஆகச் சிறந்த கருத்தரங்கம்.மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாம் தமிழர் கட்சி பல கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.நாம் தமிழர்

  2. Nivetha R

    நாங்கள் தமிழராகவே இருந்துவிட்டுப் போகிறோம் எங்களுக்கு திராவிடர் என்ற சாயம் பூச வேண்டாம்..நாம் தமிழர். தமிழர்களாக ஒன்றாவோம்..

  3. antovin2800gmail

    இனிமேல் ஒரு கருனா இனிமேல் ஒரு வகையான சுந்தரம் ஒரு ராஜீவ் காந்தி இந்த கட்சியில் பிறக்கவே கூடாது என்று ஆண்டவனை பார்த்து எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்

  4. Gouthama Naath

    ஆசான் ஆற்றிய உரை அருமையானது….எளியோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது…ஆசானின் ஆலோசனைகள் கட்சிக்கும் மக்களுக்கும் இன்றியமையாதது ….

  5. Gouthama Naath

    1 மணிநேரம் பேசக்கூட திராவிடத்திடம் செய்தி இல்லை…. ஆயுள் முழுக்க பேசினாலும் தீராத செய்திகள் தமிழில் உள்ளது..

  6. Karthikraja L

    ஆசான் செந்தமிழன் ஐயா ஆற்றிய உரை மிக மிக அருமை ?? இதுவரை கேட்காத உரை மற்றும் தெளிவான கருத்துக்கள்

  7. bilora sathyanathan

    தமிழர்களே நாம் அகதி ஆகாது வாழ நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் ?

  8. gopalakrishnan srinath

    வரலாற்றில் இடம்பெறப்போகும் ஆகச்சிறந்த கருத்தரங்கம். வாழ்க தமிழ் வெல்க தமிழினம் ♥️

    1. Elangovan M

      மிகச்சிறந்த கருத்தரங்கம்.

      தமிழ் தேசியத்தின் பிள்ளைகளாக ஒன்று கூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  9. Sathish Ra

    ஆசான் செந்தமிழன் இறையின் புதல்வன் தாய் கொற்கையின் புதல்வன் செம்பிய எழுகைக்கு முதற்கண்…

  10. bilora sathyanathan

    நான் தமிழன் என்னை எவனாச்சும் திராவிடன் என்று சொன்னால் பிஞ்ச செருப்பால் அடிப்பேன் ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*